Health
திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!
SimpliCity News Team · 09 Apr 2023
திருப்பூர்: அனுப்பர்பாளையத்தில் கொரோனா தொற்றுக்கு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளைம் நேரு நகரைச் சேர்ந்தவர் சரசு (எ) சரஸ்வதி (62). இவர் கடந்த மாதம் 23ஆம் தேதி பக்கவாத நோய் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளக்கோவில் கே.பி.சி.நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி(82) என்பவர் கொரோனா பாதித்து இறந்தார். இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே இறந்த மூதாட்டி உடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் சார்பில் அனுப்பர்பாளைம் நேரு நகர் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரம் பேணி வருகின்றனர்.
Related stories
News
Woman Dies of Snake Bite in Coimbatore
17 days ago
News
75th Independence Day Celebration in Coimbatore: Collector Sameeran accept guard of honor and hoists the National Flag
15 Aug 2021
Govt Notification
எந்த மருத்துவமனையிலும் COVID-19 இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற முடியும் - தமிழக அரசு தகவல்!
27 Apr 2021